புயல் நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பிய திமுக மாநில இளைஞரணி நிர்வாகி
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக 15 டன் அரிசியை திமுக இளைஞரணி மாநில நிர்வாகி அனுப்பி வைத்தார்.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக 15 டன் அரிசியை திமுக இளைஞரணி மாநில நிர்வாகி அனுப்பி வைத்தார்.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்துள்ளவர்களுக்கு அரசு மட்டுமல்லாது தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சியினர் உதவ முன்வர வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்
இந்நிலையில் ஈரோடு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் வழங்கும் வகையில், சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஈரோடு திமுக இளைஞரணி மாநில துணை செயலாளர் பிரகாஷ் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக 15 டன் கொண்ட 3000 அரிசி சிப்பங்களை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.