பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவுநாள்: திமுகவினர் மலர் தூவி மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி, அந்தியூரில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;

Update: 2022-02-03 09:45 GMT
அண்ணா நினைவு நாளையொட்டி, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஏ.ஜி.வெங்கடாசலம்.

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அந்தியூர் ஒன்றிய திமுக அலுவலகத்தில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில் திமுகவினர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 


இதேபோல், பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி, சவுண்டப்பூர் ஊராட்சி கணபதிபாளையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி கோபி வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ரவிந்தரன், தலைமை செயற்குழு உறுப்பினர் புகழேந்தி, ஊராட்சி மன்ற தலைவர் சுரேஸ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News