அந்தியூரில் நாளை தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
அந்தியூரில் நாளை தி.மு.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேரடி திடலில் நாளை மாலை 6 மணிக்கு தி.மு.க. சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.இதில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு முத்துசாமி , அந்தியூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் பங்கேற்று தி.மு.க .அரசின் ஓராண்டு சாதனை பற்றி பேச உள்ளனர்.