மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்களின் குறைகள் - திமுக - அதிமுக இடையே வாக்குவாதம்

ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக, திமுக கடும் கருத்து மாநகராட்சி கூட்டத்தில் கருத்து வேறுபாடு – “கருணாநிதி பெயர் சூட்டாதால் கூட்டத்துக்கு வரமாட்டோம் என கருத்து

Update: 2024-12-28 07:00 GMT

ஈரோடு மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் சு.நாகரத்தினம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் செல்வராஜ் மற்றும் துணை ஆணையர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத் தொடக்கத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தனர். பள்ளி கட்டிடங்களின் மோசமான நிலை, தெருவிளக்குகள் எரியாத பிரச்சினை, குடிநீர் விநியோகக் குறைபாடுகள், சாலைகளின் சேதம், புதைசாக்கடை பிரச்சினைகள் மற்றும் தெரு நாய்களின் தொல்லை போன்ற அடிப்படை பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. திமுக கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் தங்களை முறையாக மதிக்கவில்லை என்றும், அதிமுக கவுன்சிலர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.

கூட்டத்தில் 36 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன, அவற்றில் கனி மார்க்கெட் ஜவுளி வளாகத்தில் வாரச்சந்தை அமைப்பது தொடர்பான தீர்மானம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு, மற்ற 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டையணிந்து வந்திருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர், இதனைத் தொடர்ந்து இரு கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags:    

Similar News