ஈரோடு மாவட்டம் பவானியில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி

ஈரோடு மாவட்டம் பவானியில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடந்தது.;

Update: 2022-03-20 14:00 GMT
ஈரோடு மாவட்டம் பவானியில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி

போட்டியில் பங்கேற்ற இளைஞர்கள் தங்களது உடல் அழகை  வெளிப்படுத்திய காட்சி.

  • whatsapp icon

ஈரோடு மாவட்டம் பவானியில் ஈரோடு அமெச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் பகத்சிங் ஜிம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான நான்காவது ஆணழகன் போட்டி நடைபெற்றது.50கிலோ எடை பிரிவு முதல் 94கிலோ வரை நடைபெற்ற இப்போட்டியில் ஈரோடு,பவானி,சித்தோடு,கோபி,பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் 105க்கும் மேற்பட்ட உடல் வலிமை பயிற்சி மேற்கொண்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணழகனுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் பதக்கம்,சான்றிதழ் வழங்கப்பட்டது.தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் உடற்பயிற்சி செய்த இளைஞர்கள் தங்களது உடல் அழகை வெளிபடுத்திய விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.மேலும் பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து போட்டியில் பங்கேற்ற இளைஞர்களை உற்சாகப்படுத்தினர்.

Tags:    

Similar News