ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம்!
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (மே.5) நடைபெற்றது.;
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (மே.5) நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கத்திரிமலையில் மின் இணைப்பு வழங்குதல் மற்றும் சாலை தொடர்பு இல்லாத குக்கிராமங்களுக்கு சாலை வசதிகள் அமைப்பது தொடர்பாகவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் புதிதாக அனுமதிக்கப்பட்ட சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது மற்றும் பிறப்பு, இறப்பு பதிவில் பெற்றோரின் ஆதார் விபரங்கள் மென்பொருளில் பதிவு செய்து இணைப்பது தொடர்பாகவும், பேரூராட்சிகள் துறை, வனத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் ஊராட்சிகளில் மின் கட்டண நிலுவையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாகவும், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஈரோடு-கரூர் சாலை அகலப்படுத்துதல் மற்றும் வெள்ளகோயில்-சங்ககிரி சாலை அகலப்படுத்துதல் தொடர்பாகவும் என பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக விரிவாக ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அர்பித் ஜெயின், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.