ஈரோட்டில் இயற்கை வேளாண் பொருட்கள் சந்தை!
ஈரோட்டில் நடந்த இயற்கை வேளாண் பொருட்கள் சந்தையை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்.;
ஈரோட்டில் நடந்த இயற்கை வேளாண் பொருட்கள் சந்தையை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் இயற்கை விவசாயிகளை ஊக்கப்படுத்தவும். பொதுமக்களுக்கு நஞ்சில்லா காய்கறியை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, ஈரோடு வ.உ.சி. பூங்கா நடைபயிற்சி மைதானத்தில் முதல்முறையாக இயற்கை வேளாண்மை பொருட்கள் சந்தை நேற்று காலை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா சந்தையை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் இயற்கை விவசாயிகள் 14 பேர் கலந்துகொண்டு புடலை, சுரைக்காய், வெள்ளரி, கத்தரிக்காய், பீர்க்கங்காய், கொத்தவரை, பாகற்காய், தேங்காய் போன்ற காய் கறி, கீரை வகைகள், பழங்கள் ஆகியன விற்பனை செய்யப்பட்டது. மேலும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களும் இடம்பெற்றன.
இதில் தோட்டக்கலை துணை இயக்குனர் குருசரஸ்வதி, ஈரோடு விற்பனைக்குழு செயலாளர் சாவித்ரி, வேளாண்மை துணை இயக்குனர் ஸ்ரீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.