ஈரோட்டில் 1,072 தனியார் பள்ளி வாகனங்கள் வருடாந்திர ஆய்வு!
ஈரோடு பவளத்தான்பாளையத்தில் 1,072 தனியார் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர கூட்டாய்வு பணியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்து, ஆய்வு மேற்கொண்டார்.;
ஈரோடு பவளத்தான்பாளையத்தில் 1,072 தனியார் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர கூட்டாய்வு பணியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்து, ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் பவளத்தான்பாளையம், ஏஈடி பள்ளி வளாகத்தில் வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் தனியார் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர கூட்டாய்வு பணியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்து, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 103 பள்ளிகளைச் சேர்ந்த 1,072 வாகனங்களில் வருடாந்திர கூட்டாய்வு நடைபெற்றது. மேலும், இதில் குறைகள் கண்டறியப்பட்ட வாகனங்கள் ஒரு வாரத்திற்குள் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்விற்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வின்போது, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ரவி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பதுவைநாதன் ஈரோடு மேற்கு (ம) ஈரோடு கிழக்கு (பொ), மாதவன் (பெருந்துறை), மோட்டர் வாகன ஆய்வாளர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.