ஈரோடு மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண சலுகை அட்டை புதுப்பிக்க சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை அட்டை புதுப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார்.;
ஈரோடு மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை அட்டை புதுப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 2025-26ம் நிதியாண்டிற்கு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை அட்டை புதுப்பிக்க வரும் மார்ச் 19ம் தேதி (புதன்) மற்றும் மார்ச் 20ம் தேதி (வியாழன்) அன்று காலை 10 முதல் 3 மணி வரை சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அன்றைய தினமே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை அட்டையை புதுப்பித்து பெற்றுக்கொள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே வழங்கப்பட்ட இலவச பேருந்து பயண சலுகை அட்டை அசல் மற்றும் நகல், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், 3 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகிய சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.