ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மே 1ம் தேதி கிராம சபை கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் தெரிவித்துள்ளார்.;

Update: 2025/04/24 19:20 GMT

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் நடைபெறும் இடம் தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

2025 மே 1ம் தேதி (தொழிலாளர் தினம்) அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில், கிராம ஊராட்சி மற்றும் பொதுநிதி செலவினம் (01.04.2024 முதல் 31.03.2025 முடிய) செலவினம் குறித்து விவாதித்தல், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுயசான்றினை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதி படுத்துதல் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படும்.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஈரோடு மாவட்ட ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News