ஈரோடு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 40 கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.26) நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 40 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்றார்.

Update: 2024-12-26 11:30 GMT

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.26) நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 40 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்றார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் அந்தந்தபகுதிகளில் உள்ள வட்டார மற்றும் துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் இவற்றைப் பெற்று பயன்பெறலாம்.


விவசாயிகளுக்கு தேவையான பூச்சிமருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் போதுமான அளவு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் விபரங்களை சரிபார்த்து உறுதி செய்தால் (cKYC) மட்டுமே இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து நிதியுதவி பெறமுடியும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பி.எம்.கிசான் நிதிஉதவி பெற்றுவரும் விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும்.

இதுவரை ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாத விவசாயிகள் மற்றும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து திட்டப் பயன்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தோட்டக்கலைத்துறை மூலம் தென்னையில் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு, கருந்தலைபுழு, ரூகோஸ் வெள்ளை ஈ போன்ற பூச்சிகள் தாக்குதல் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, தற்சமயம் வேர் வாடல் நோயானது ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய பகுதிகளில் தென்படுவதாகவும் அதற்கு உரிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தோட்டக்கலை துணை இயக்குநரால் எடுத்துரைக்கப்பட்டது.


இதனையடுத்து, கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் பெரியம்மை நோயினை தடுக்க கிராம அளவில் முகாம் அமைத்து தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கால்நடை மருத்துவரால் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், விவசாயிகளிடமிருந்து 40 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) மனோகரன், (தோட்டக்கலை துணை இயக்குநர்) மரகதமணி, துணை இயக்குநர் (ஈரோடு விற்பனைக் குழு) சாவித்திரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், செயற்பொறியாளர், நீர்வள ஆதாரத் துறை, ஈரோடு மற்றும் பவானிசாகர் அணை கோட்டம் அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News