பெருந்துறையில் பொதுமக்களிடம் இருந்து 326 கோரிக்கை மனுக்களைப் பெற்ற ஈரோடு ஆட்சியர்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பெருந்துறையில் நடைபெற்ற அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 326 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்றார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பெருந்துறையில் நடைபெற்ற அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 326 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்றார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள சக்தி திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், துறைச் சார்ந்த முதன்மை அலுவலர்கள் மேற்கொண்ட அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகள், மாணவ, மாணவிகளின் கல்வித் தரம், தேர்ச்சி விகிதம், பள்ளிகள் உட்கட்டமைப்பு, நியாய விலை கடைகள், ஊர் புறப் நூலகங்கள், கலைஞரின் கனவு இல்லம், குடிநீர் இணைப்பு, அரசு அலுவலகங்கள் சீரமைப்பு பணிகள், பல்வேறு சான்றிதழ் வழங்குதல், சாலை வசதிகள், மின்சார வசதிகள், பேருந்து வசதிகள், கால்நடை அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்டவை ஆய்வுகள் மேற்கொண்டது குறித்து அலுவலர்களுடன் விவாதித்தார். மேலும், ஆய்வுகளில் கண்டறியப்பட்ட குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 326 மனுக்களை பெற்று, தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, பெருந்துறை அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியினை பார்வையிட்டு, விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, தினசரி வழங்கப்படும் உணவுகளின் விவரங்களை கேட்டறிந்து, மாணவர்கள் தங்கும் அறை, கழிவறை, மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ரவி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல் உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.