ஈரோடு மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 270 கோரிக்கை மனுக்களை பெற்று, நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

ஈரோட்டில் இன்று (ஜன.6) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 270 கோரிக்கை மனுக்களை பெற்று, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.

Update: 2025-01-06 10:45 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா குறைகளை கேட்டறிந்த போது எடுத்த படம்.

ஈரோட்டில் இன்று (ஜன.6) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 270 கோரிக்கை மனுக்களை பெற்று, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (ஜன.6) திங்கட்கிழமை நடைபெற்றது.


இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சிறுபாலம் வேண்டி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 270 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர், அவற்றை உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, தொழிலாளர் துறையின் சார்பில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் எரிவாயுவில் இயங்கக்கூடிய வாகனம் வாங்குதல் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயிலுவதற்கான கல்வி உதவித்தொகைக்கான ஆணையினையும் அவர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, கொடுமுடி பகுதியைச் சேர்ந்த நீரில் மூழ்கி உயிரிழந்த 2 நபர்களின் வாரிசுதாரருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையினையும் என 4 பயனாளிகளுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.


இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி)செல்வராஜ், மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல், துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News