ஈரோடு திண்டலில் முதல்வர் மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
ஈரோடு திண்டலில் செயல்பட்டு வரும் முதல்வர் மருத்துவத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.;
ஈரோடு திண்டலில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.
ஈரோடு திண்டலில் செயல்பட்டு வரும் முதல்வர் மருத்துவத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத் துறையின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை காணொலி காட்சி வாயிலாக கடந்த 24ம் தேதி திறந்து வைத்தார். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 36 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட திண்டல்மலை நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் செயல்படும் முதல்வர் மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்ச் 1ம் தேதி) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.கந்தராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.