அந்தியூர் அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் தகராறு: உறவினர்கள் சாலை மறியல்

அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உடலை அடக்கம் செய்வதில் தகராறு ஏற்படவே, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-09 13:15 GMT

இறந்தவரின் உடலை வைத்து தேவலன்தண்டா பேருந்து நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள தேவலன்தண்டா பகுதியில் வசித்து வந்த லட்சுமி (எ) குருவம்மாள் (75), நேற்று இரவு இவர் உயிரிழந்தார்.

இறந்தவரின் உடலை தேவலன்தண்டா பகுதியில் உள்ள மயானத்தில் புதைப்பதற்காக எடுத்துச் செல்ல முற்படும்போது, அதே பகுதியை சேர்ந்த குமார் என்பர் தனது விவசாய நிலத்திற்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டாம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் இறந்தவரின் உடலை வைத்து, தேவலன்தண்டா பேருந்து நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமார் மற்றும் வெள்ளித்திருப்பூர் உதவி ஆய்வாளர் வேலுமுத்து ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்படுத்தினர்.

அதன் பின்பு இறந்தவரின் உடல் அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவத்தினால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News