அந்தியூரில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கலந்துரையாடல்
அந்தியூர் அடுத்த காக்காயனூர் மலை கிராமத்தில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கான கலந்துரையாடல் நடைபெற்றது.;
மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடைபெற்ற கலந்துரையாடல்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சங்கராபாளையம் ஊராட்சியில் உள்ள காக்காயனூர் மலை கிராமத்தில் அந்தியூர் வனத்துறை சார்பில், பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிப்பதற்காக மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பெறுவதற்காகவும் மாவட்ட வன அலுவலர் கௌதம் தலைமையில் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக வரவேற்புரையாற்றிய அந்தியூர் வனசரகர் உத்திரசாமி, மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வனத்துறை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பற்றிப் பேசினார்.தொடர்ந்து பேசிய மாவட்ட வன அலுவலர் கௌதம், பல்லுயிர் பற்றியும், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பற்றியும் பேசினார்.
மேலும் மலைவாழ் மக்களின் தேவைகளை அறிந்து வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் என் டி சி ஏ குழுவினர்கள் கலந்துகொண்டு மலைவாழ் மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் வாழ்க்கைமுறையை அறிந்து கொண்டனர்.இந்த நிகழ்வில் வனத்துறையினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்