ஈரோட்டில் பாஜக பிரமுகர் அலுவலகம் மீது டீசல் பாக்கெட் வீச்சு

ஈரோட்டில் பாஜக பிரமுகர் அலுவலகம் மீது டீசல் பாக்கெட் வீசியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-09-23 12:30 GMT

ஈரோடு மூலப்பாளையத்தில் பாஜக பிரமுகருக்கு சொந்தமான அலுவலகத்தில் வீசப்பட்ட டீசல் நிரப்பிய பிளாஸ்டிக் பாக்கெட்.

ஈரோடு மூலப்பாளையம் டெலிபோன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே பாஜக பிரமுகர் தட்சிணாமூர்த்திக்கு சொந்தமான அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை மர்ம ஆசாமிகள் சிலர் அலுவலகம் மீது டீசல் நிரப்பிய பாக்கெட்டை தீ பற்றி வீசி உள்ளனர். இதில் அலுவலகத்தின் கதவு லேசாக சேதமடைந்தது. மேலும் அருகில் இருந்த ஜன்னல் கம்பிகள் தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். எரிந்த நிலையில் கிடந்த பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்திCள்ளது.

Tags:    

Similar News