கோபிசெட்டிபாளையம் அருகே வயிற்று வலி காரணமாக விஷம் குடித்தவர் சாவு
எலத்தூர் செட்டிபாளையத்தில் வயிற்று வலி காரணமாக விஷம் குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சின்ன காளியண்ணன். இவருக்கு, கடந்த சில ஆண்டுகளாக வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாகாத நிலையில் இருந்து உள்ளது.
இந்நிலையில் சின்ன காளியண்ணனுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்படவே, மனமுடைந்த சின்ன காளியண்ணன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள்அ வரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சின்ன காளியண்ணன் உயிரிழந்தார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.