பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் ரூ.19.98 லட்சம் உண்டியல் காணிக்கை

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் ரூ.19.98 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்தனா்.

Update: 2023-06-15 03:15 GMT

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

ஈரோடு மாவட்டம் பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோயிலாக வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்னால் இரட்டை விநாயகர் படித்துறை பகுதியில் காவிரி பவானி மற்றும் அமுத நதி என மூன்று நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது. இக்கோயிலில் 4 மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம்.


அதன்படி, சங்கமேஸ்வரர் கோயில், வேதநாயகி அம்மன், ஆதிகேசவப் பெருமாள் சன்னதி மற்றும் பழனியாண்டவர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உண்டியல் என மொத்தம் 21 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.

சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையாளர் சுவாமிநாதன் தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை ஈரோடு மாவட்ட உதவி ஆணையர் அன்னக்கொடி, பண்ணாரி மாரியம்மன் கோயில் கண்காணிப்பாளர் பாலசுந்தரி, பவானி சரக ஆய்வாளர் நித்யா ஆகியோர் முன்னிலையில், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், மொத்தம் ரூ.19 லட்சத்து 97 ஆயிரத்து 927-யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும் 54 கிராம் தங்கமும், 359 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

Tags:    

Similar News