சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை; 5 நாட்களில் ரூ.46.50 லட்சம்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியலில் கடந்த 5 நாட்களில் ரூ.46.50 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.;
சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியலில் கடந்த 5 நாட்களில் ரூ.46.50 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 8ம் தேதி குண்டம் விழா நடைபெற்றது.
இக்குண்டம் விழாவை தொடர்ந்து, மறுநாளான 9ம் தேதி கோவிலில் உள்ள 20 உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. இதில், ரூ.1.02 கோடி ரூபாய் ரொக்க பணம், 217 கிராம் தங்கம், 839 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் மறு பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நேற்று மீண்டும் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. 20 உண்டியல்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.46 லட்சத்து 50 ஆயிரத்து 291 ரூபாய் ரொக்க பணம், 57 கிராம் தங்கம், 479 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.