அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.12 லட்சம்!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.12 லட்சத்தை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.;
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.12 லட்சத்தை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் 10 உண்டியல்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
பவானி சங்கமேஸ்வரர் கோவில் ஆணையர் அருள்குமார் மேற்பார்வையில் அந்தியூர் தனியார் கல்லூரி மாணவிகள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல்களில், மொத்தம் ரூ.12 லட்சத்து 4 ஆயிரத்து 389 இருந்தது. மேலும், 145 கிராம் தங்கமும், 344 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.