ஈரோடு ரயில்வே காவல் நிலையத்தில் கோவை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆய்வு
ஈரோடு ரயில்வே காவல் நிலையத்தில் கோவை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாபு இன்று (டிச.21) ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு ரயில்வே காவல் நிலையத்தில் கோவை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாபு இன்று (டிச.21) ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு ரயில் நிலைய 3வது நடைமேடையில் ரயில்வே காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தில் கோவை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாபு இன்று (டிச.21) வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்தும், ரயிலில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுப்பது குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், போலீசாருக்கு அரசு வழங்கிய சீருடை உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, ரயில்வே காவல் ஆய்வாளர் பிரியா சாய்ஸ்ரீ மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் உடனிருந்தனர்.