அந்தியூர் அரசு பள்ளியில் பழுதடைந்த கட்டடம் இடிக்கும் பணி துவக்கம்

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் 30 ஆண்டுகளுக்கு முன், கட்டப்பட்ட பழுதடைந்த கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்றது.

Update: 2022-01-05 13:00 GMT

கட்டிடத்தை இடிக்கும் பணி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன், மூன்று ஓட்டு பள்ளி கட்டடங்களும், பத்து ஆண்டுகளுக்கு முன் இரண்டு பள்ளி அறை கட்டடங்களும் கட்டப்பட்டன. இந்த கட்டடங்கள் பழுதடைந்ததால், இக்கட்டடத்தை இடித்து விட்டு வேறு கட்டிடம் கட்டித்தர வேண்டும் என, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ-விடம் பள்ளி தலைமையாசிரியை பானுமதி மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, இக்கட்டடத்தை இடித்து விட்டு, இதே இடத்தில் நபார்டு வங்கி மூலம், மாற்று கட்டிடம் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதியளித்தார். இதை தொடர்ந்து. பொதுப்பணித்துறை சார்பில், பழுதடைந்த பழைய பள்ளி கட்டடத்தை இடிக்கும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News