நம்பியூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி

நம்பியூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-01-26 15:30 GMT

பலியான புள்ளிமான்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் கெட்டிசெவியூர் அருகே திட்டமலை அடிவாரத்தில் ஒரு புள்ளி மான் நேற்றிரவு இறந்து கிடந்தது. நம்பியூர் போலீசார் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது இறந்து கிடந்தது இரண்டு வயதுடைய புள்ளிமான் ஆகும். இந்த வழியாக செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News