சித்தோடு அருகே இருவேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை

சித்தோடு அருகே இருவேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-01-19 11:30 GMT

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள நசியனூர் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கம். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறிய தங்கம்,  பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். தனியார் நிறுவன ஓட்டுநர். லோகநாதனில் பிறந்தநாளான நேற்று, உறவினர்கள் யாரும் கண்டு கொள்ளவது இல்லை எனக்கூறி, வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News