பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் தருமை ஆதினம் சுவாமி தரிசனம்
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் சுவாமி தரிசனம் செய்தார்.;
பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் சுவாமி தரிசனம் செய்தார்.
காவிரி, பவானி, கண்களுக்கு தெரியாத அமுத நதி ஆகியவைகள் சங்கமிக்கும் இடமாகவும், காசிக்கு அடுத்தபடியாக பரிகாரம் செய்யும் இடமாகவும் விளங்கும் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலுக்கு, நேற்று (ஜன.6) மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.
அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஈரோடு ஆதீனம் பாலாஜி சிவம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலுக்குள் சென்றதும் தருமபுரம் ஆதீனம் முதலில் சங்கமேஸ்வரரை வழிபட்டார். பின்னர், பெருமாள் சன்னதிக்கு சென்று ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ள ஆதிகேசவ பெருமாளை தரிசனம் செய்தார். மேலும், கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பலர் தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்றனர்.