ஈரோடு மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க வீரர்-வீராங்கனைகள் தங்கம் வென்று சாதனை

Cymbals Players Won Gold Silver Medal ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், ஈரோடு மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க வீரர் வீராங்கனைகள் 11 தங்கம், 6 வெள்ளி உள்ளிட்ட 32 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.;

Update: 2024-01-03 07:00 GMT

ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், ஈரோடு மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க வீரர் வீராங்கனைகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

Cymbals Players Won Gold Silver Medal

ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், ஈரோடு மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க வீரர் வீராங்கனைகள் 11 தங்கம், 6 வெள்ளி உள்ளிட்ட 32 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

உலக சிலம்பம் சம்மேளனம் மற்றும் அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பில், 5வது ஆசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நாகர்கோவிலில் நடத்தது. கடந்த மாதம் 26 முதல் 29ம் தேதி வரை நடந்த இப்போட்டியில், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டியானது மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் போன்ற பிரிவுகளின் கீழ் ஒரு மாணவன் மூன்று பிரிவுகளில் கலந்து கொள்ளும் விதமாக நடைபெற்றது.

குத்து வரிசை, அலங்கார வீச்சு, ஒற்றை கம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, வேல்கம்பு வீச்சு, ஒற்றை சுருள் வாள், இரட்டை சுருள் வாள், ஆயுத ஜோடி, நேரடி சண்டை ஆகிய பிரிவுகளில் வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தியா முதலிடத்தைப் பிடித்து, சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இந்திய அணி சார்பில், ஈரோடு மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் செயலாளர் பொன் லோகேஷ் மற்றும் தலைவர் வினோத்குமார் தலைமையில் பங்கேற்ற 12 வீரர்கள் வெற்றி பெற்று 11 தங்கம், 6 வெள்ளி 15 வெண்கலம் என 32 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.

Tags:    

Similar News