ஈரோட்டில் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி

Cyber Crime Awareness Rally ஈரோட்டில் சைபர் க்ரைம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வெள்ளிக்கிழமை (இன்று) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2024-02-09 12:15 GMT

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து சைபர் க்ரைம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Cyber Crime Awareness Rally

ஈரோட்டில் சைபர் க்ரைம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வெள்ளிக்கிழமை (இன்று) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சைபர் க்ரைம் விழிப்புணர்வு பேரணி ஈரோட்டில் நடைபெற்றது. ஈரோடு சைபர் கிரைம் போலீசார் சார்பில், நடத்தப்பட்ட இப்பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானாவில் தொடங்கிய பேரணி, பிரப்ரோடு வழியாக ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் நிறைவடைந்தது. இதில், சைபர் கிரைம் போலீசார் மற்றும் திரளான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய போலீசார், அதிகரித்து வரும் ஆன்லைன் குற்றங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை தடுக்க பொதுமக்கள் தங்களது வாட்ஸ்அப், பேஸ்புக், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வரும் விளம்பரத்தில் பார்ட் டைம் ஜாப் எனும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

மேலும் பெண்கள் தங்களது போட்டோக்களை பதிவேற்றம் செய்வது மற்றும் தகவல்களை பதிவிடுவது போன்ற செயல்களையும் மேற்கொள்ள வேண்டாம். சைபர் கிரைம் குற்றவாளிகள் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து, அவர்களை மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடும். மேலும், தமக்கு வரும் இணைப்புச் சுட்டிகளையும் (லிங்க்) தொட வேண்டாம்.

பொதுமக்கள் தங்களுக்கு வரும் ஓடிபி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தங்களது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விட்டால் 1930 எண்ணில் உடனடியாகத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், ஈரோடு சைபர் கிரைம் காவல் நிலையத்தை 0424-2265100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.மேலும், www.cybercrime.gov.in எனும் இணையதளத்தின் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் என்றனர்.

Tags:    

Similar News