பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 703 கன அடியாக உள்ளது.

Update: 2021-12-18 03:00 GMT

பவானிசாகர் அணையின் இன்றைய (18.12.2021) நீர்மட்ட‌ நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 20-ம் தேதி 104 அடியை எட்டியது. தொடர்ந்து 105 அடியை எட்டும் நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 28 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியில் நீடித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 104.66 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 32.51 டிஎம்சி ஆக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 703 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்காலில் 500 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலில் 2300 கனஅடியும், பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கனஅடியும் என மொத்தம் 2900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News