ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 288 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் இன்று 1,052 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது;
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் உச்சத்தை எட்டிய தொற்று பாதிப்பு பிறகு குறைய தொடங்கியது.
இன்று புதிதாக 288 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 928 ஆக உயர்ந்தது.
கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இன்று மட்டும் 1,052 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதுவரை 1 லட்சத்து 24 ஆயிரத்து 526 பேர் குணமடைந்தனர்.
தற்போது 5 ஆயிரத்து 673 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 729 ஆக உள்ளது.