பங்களாப்புதூர் அருகே வினோபாநகர் பகுதியில் கிடந்த நாட்டுத் துப்பாக்கி
கோபிசெட்டிபாளையம் பங்களாப்புதூர் அருகே உள்ள வினோபாநகர் பகுதியில் கிடந்த நாட்டுத் துப்பாக்கியை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.;
ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி வனப்பகுதியையொட்டிய வினோபாநகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர், பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த ஒற்றை குழல் நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.
அதனைத்தொடர்ந்து, துப்பாக்கி கிடந்தது வனப்பகுதியையொட்டிய பகுதி என்பதால் யாரோ வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி விட்டு விட்டு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது