அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.12.70 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று ரூ.12.70 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.;
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், அத்தாணி, கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், சென்னம்பட்டி, ஆப்பக்கூடல், கோவிலூர், எண்ணமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 374 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
மொத்தம் 131.57 குவிண்டால் பருத்தியானது, குறைந்தபட்ச விலையாக ரூ.94.95க்கும், அதிகபட்ச விலையாக ரூ.102.89க்கும் விற்பனை ஆனது.பருத்தி மொத்தம் ரூ.12 லட்சத்து 70 ஆயிரத்து 727 ரூபாய்க்கு ஏலம் போனதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஏலத்தில் தர்மபுரி, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் பருத்தியை ஏலம் எடுத்துச்சென்றனர்.