அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் பருத்தி ஏலம் துவக்கம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் மறைமுக பருத்தி ஏலம் விற்பனை நேற்று (24ம் தேதி) துவங்கியது.

Update: 2024-06-25 01:15 GMT
அந்தியூர் விற்பனைக் கூட்டத்தில் பருத்தி ஏல விற்பனை துவக்க நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் நேற்று மறைமுக பருத்தி ஏலம் விற்பனை துவங்கியது. இந்த ஏலத்திற்கு அந்தியூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைந்த பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.


மறைமுக ஏலம் முறையில் நடந்த இந்த விற்பனையை அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் துவக்கி வைத்தார். துணைத்தலைவர் பழனிச்சாமி, அந்தியூர் பேரூர் திமுக செயலாளர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஈரோடு விற்பனைக் குழு துணை இயக்குநர் சாவித்திரி தலைமை வகித்தார். இதில், அந்தியூர் விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ஞானசேகர், பூதப்பாடி விற்பனைக் கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன், பவானி விற்பனைக் கூட மேற்பார்வையாளர் சுப்பிரமணியம், மேற்பார்வையாளர்கள் சக்கரவர்த்தி, கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


நேற்று நடந்த முதல் நாள் ஏலத்தில் ஒரு கிலோ பருத்தி அதிகபட்சமாக, 76.19 ரூபாய்க்கும், குறைந்த விலையாக ஒரு கிலோ 63.19 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 277 மூட்டை பருத்தி ரூ.5.70 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது. மேலும், இந்த ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட்டத்தின் கண்காணிப்பாளர் ஞானசேகர் தலைமையில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News