வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு -ஈரோடு மாநகராட்சி எச்சரிக்கை

ஈரோட்டில் வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை;

Update: 2021-12-05 10:30 GMT
வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு -ஈரோடு மாநகராட்சி எச்சரிக்கை
  • whatsapp icon

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம், குத்தகை இனம் மற்றும் வரியில்லா இனங்கள் ஆகியவற்றை உடனடியாக மாநகராட்சிக்கு செலுத்தி மாநகராட்சி பகுதிக்குள் அடிப்படை மற்றும் அபிவிருத்தி பணிகள் செய்வதற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் 2021-22ம் ஆண்டு முடியவுள்ள நிலுவை இனங்களை செலுத்தாத உரிமைதாரர்களின் வீட்டு குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்யப்படுவதுடன் மாநகராட்சி சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News