ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் இருக்காது: மாநகராட்சி அறிவிப்பு

வால்வு பழுதனதால் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று (ஜன.15) புதன்கிழமை மதியம் முதல் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையாளர் மனிஷ்.என் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-01-15 11:30 GMT

ஈரோடு மாநகராட்சி அலுவலகம்.

வால்வு பழுதனதால் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று (ஜன.15) புதன்கிழமை மதியம் முதல் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையாளர் மனிஷ்.என் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ்.என் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

ஈரோடு மாநகராட்சியின் வரதநல்லூர் ஊராட்சிக்கோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் பிரதான நீரேற்று குழாயில் இருந்து சூரியம்பாளையம் குடிநீர் சேகரிப்பு தொட்டிக்கு செல்லும் வால்வு பழுதினை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால், இன்று (ஜன.15ம் தேதி) மதியம் முதல் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் இருக்காது. பழுது நீக்கம் சரிசெய்யப்பட்டவுடன் படிப்படியாக குடிநீர் விநியோகம் சீர்செய்யப்படும்.

எனவே, பொதுமக்கள் இதனால் ஏற்படும் அசௌகரியத்தை பொறுத்துக் கொண்டு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News