ஈரோடு மாவட்டத்தில் 72 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 72 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-01-12 17:30 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில்  வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை கடந்த 3-ம் தேதி தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் 523 பள்ளிகளில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 260 மாணவ, மாணவிகள் உள்ளனர். கடந்த 3-ம் தேதி முதல் பள்ளிகளில், 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 72 ஆயிரம்  சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.‌ இதேபோல், கடந்த 2 நாட்களில் 845 முன்களபணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News