436 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 436 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2021-11-13 10:00 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 436 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். குறிப்பாக 2-ம் தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாநகர் பகுதியில் 60 வார்டிலும், ஒவ்வொரு தடுப்பூசி மையம் என 50 தடுப்பூசி முகாம், இதுபோக நடமாடும் வாகனம் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் விவரம் சேகரிக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். தடுப்பூசி போடாதவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு அதனடிப்படையில் தடுப்பூசி போடப்படும். இதன் மூலம் விரைவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் பட்டியலில் நமது மாவட்டமும் இணைந்துவிடும் என சுகாதார துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இன்று மாலை 7மணி வரை இந்த தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடைபெறும். இன்று 58 ஆயிரத்து 400 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News