ஈரோடு மாவட்டத்தில் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை 416 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

Update: 2022-04-01 09:45 GMT

பைல் படம்

தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) 27வது கட்டமாக மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் முன் எச்சரிக்கை தடுப்பூசி (பூஸ்டர்) இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமையொட்டி நாளை அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உள்பட 416 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 1.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது. மேலும், இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் மாவட்டம் முழுவதும் 1,664 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணி செய்திடவும், 66 வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்தப்பட உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசிகள் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களில் செலுத்தப்பட உள்ளது. 12 முதல் 14 வயதுடைய மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே அனைவரும் அச்சமின்றி, தயக்கமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News