ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் 1597 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
Free Vaccination Camp- ஈரோடு மாவட்டத்தில் 1597 இடங்களில் 33-வது கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.;
Free Vaccination Camp- ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 33ஆவது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் என மொத்தம் 1,597 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்.முகாமில் 1.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியிலும், 70 வாகனங்கள் முகாமிற்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2