ஈரோடு மாவட்டத்தில் 4-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை

ஈரோடு மாவட்டத்தில் 4-வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

Update: 2022-03-24 13:15 GMT

பைல் படம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக ஈரோடு மாவட்டம் உள்ளது. சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள பட்டியலில், இன்று ஈரோடு மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 734 ஆக உள்ளது. மேலும் இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை ஈரோடு மாவட்டத்தில் 1,31,925 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,32,666 ஆக உயர்வு. மாவட்டத்தில் 7 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News