ஈரோடு மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை
ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒருவர் மட்டும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவின் 3-வது அலை உச்சத்தில் இருந்தபோது ஒரே நாளில் 1,300-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா பரவல் வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த ஒரு வாரமாக 5-க்கும் உட்பட்டவர்களுக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 666 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மட்டும் குணம் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 924 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 8 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.