ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 3 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஒற்றை இலக்கு எண்ணில் மட்டுமே கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இந்த நிலையில் இன்று புதிதாக ஒருவருக்கு மட்டுமே நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 665 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்துவிட்டதால் இன்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாவட்டத்தில் 15 பேர் மட்டுமே கொரோனாவுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.