ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக 1,314 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் 1,314 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.;

Update: 2022-01-27 15:45 GMT

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 894 பேருக்கு பரிசோதனை செய்ததில் 1,302 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் இன்று புதிய உச்சமாக மாவட்டத்தில் 1,314 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாக சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 437 ஆக உயர்ந்தது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 898 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 578 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தற்போது தொற்று உள்ள 8 ஆயிரத்து 137பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் தற்போது வரை 722 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News