கொரோனா கட்டுப்பாடுகள்: கருங்கல்பாளையம் கால்நடை சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.

Update: 2022-01-06 06:30 GMT

கருங்கல்பாளையம் மாட்டு சந்தை.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த மாட்டுச் சந்தைக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவது வழக்கம். இதுபோல் உள்ளூர் வியாபாரிகளும் அதிக அளவில் வருவார்கள்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி, வழக்கமாக டிசம்பர் இறுதி வாரத்தில் இருந்தே சந்தைக்கு விற்பனைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி விடும். ஆனால் கொரோனா ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை பாதிக்கப்பட்டது. கடந்த வாரம் போல 600 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், 70 சதவீத மாடுகள் மட்டுமே விற்பனையானதாக மாட்டுசந்தை வியாபாரிகள் கூறினர்.

Tags:    

Similar News