ஈரோடு மாவட்டத்தில் நாளை 28-வது கட்ட கொரோனா மெகா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் 579 மையங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

Update: 2022-04-29 03:15 GMT

பைல் படம்

இது குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நாளை சனிக்கிழமை (30ந் தேதி)  நடைபெறவுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என 579 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும்.

இம்முகாமில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் 2,316 பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும், மேலும், 60 வயது நிறைவடைந்து, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன் களப்பணியாளர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியும் இலவசமாக செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News