ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.;
பைல் படம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. அதன்பிறகு நேற்று யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 770 ஆக உயர்ந்தது. அதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 933 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 734 பேர் பலியாகி உள்ளனர்.