ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 69 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 69 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-02-17 15:15 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 3 ஆயிரத்து 696 பேருக்கு பரிசோதனை செய்ததில் 77 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 267 ஆக உயர்ந்தது.

மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 234 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 1,272 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News