Cooperative Department Job Vacancy ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலிப்பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு

Cooperative Department Job Vacancy கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக ஈரோடு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.;

Update: 2023-11-26 07:15 GMT

கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Cooperative Department Job Vacancy

கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக ஈரோடு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது‌.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண்மை. மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் 73 உதவியாளர் காலிப் பணி இடங்கள் உள்ளன. இந்த பணி இடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு www.drberd.in என்ற இணையதளம் வழியாக வருகிற 1ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு அடுத்த மாதம் (டிசம்பர்) 24ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஈரோடு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் சார்பில் நடத்தப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பும், கூட்டுறவு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். புனே வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம் வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24-ம் ஆண்டு நேரடி பயிற்சி அல்லது அஞ்சல் வழி அல்லது பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ளவர்களும் உரிய சான்று மற்றும் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதை ஈரோடு மாவட்ட ஆள்சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News