திம்பம் மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி பழுது: போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி.

Update: 2021-12-23 08:45 GMT

கண்டெய்னர் லாரியை மீட்கும் காட்சி.

திம்பம் மலைப்பாதையில், பழுதான கண்டெய்னர் லாரியால், போக்குவரத்து பாதித்தது. கோயமுத்தூரிலிருந்து கண்டெய்னர் லாரி, கர்நாடக மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில், லாரி வந்தது. 9-வது கொண்டை ஊசி வளைவில், டிரைவர் திரும்ப முயன்றபோது, பழுதான லாரி நகர முடியாமல் நின்றது. இதனால் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனையடுத்து, மற்ற வாகன ஓட்டிகளும் லாரியை தள்ளி மீட்க முடியவில்லை. பின்னர், கிரேன் உதவியுடன் லாரியை நகர்த்தினர். இதனால் 4 மணி நேரத்திற்கும் மேலாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News