மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் பற்றி அந்தியூரில் ஆலோசனை கூட்டம்

அந்தியூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2022-05-22 10:00 GMT

அந்தியூரில்  மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட உள்ள ஆரப்பாட்டம் பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் ஒன்றிய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, அந்தியூரில் வரும் 26ம் தேதி மற்றும் 27ம் தேதி நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

முன்னதாக, அந்தியூர் ஒன்றிய செயலாளர் சிறுத்தை தங்கராசு வரவேற்றார்.அந்தியூர் தொகுதி செயலாளர் க. வெற்றிச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ஆர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில், வடக்கு மாவட்ட ஊடக மைய அமைப்பாளர் சுரேஷ், ஈஸ்வரன், மாரசாமி, கர்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News